Latest posts

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

புதன், 23 நவம்பர், 2016

S இராமச்சந்திரபுரம் சாலியர் ஜவுளி வியாபாரிகள் சங்கத்தின் மக்கள் சேவை.

S.ராமச்சந்திரபுரத்திலுள்ள சாலியர் ஜவுளி வியாபாரிகள் அனைவரையும் ஒன்று சேர்த்து சங்கம் ஒன்றை நடத்தி வருகிறோம்.

இந்த சங்கம் மூலம் நமது ஊரான  S.ராமச்சந்திரபுரத்திற்கு (பட்டியக்கல்பல சேவைகளை செய்து வருகிறோம்.



உதாரணத்திற்கு நீத்தார் பூங்கா ஏற்படுத்தி, பராமரித்து வருவது, கலைமகள் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு இலவச நோட்டு புத்தகங்கள் மற்றும் ஆங்கிலம்-தமிழ் அகராதி  வழங்கியது, சுற்றி உள்ள ஊர் மக்களுக்கு மருத்துவ முகாம் நடத்தியது என பற்பல சேவைகளை செய்து வருகிறோம். இன்னும் பல சேவைகளை செய்ய திட்டமிட்டுள்ளோம்.

சென்ற வாரம் 20-11-2016 ஞாயிற்றுக்கிழமை S.ராமச்சந்திரபுரம் கலைமகள் மேல்நிலை பள்ளியில் இலவச கண் பரிசோதனை மற்றும் சர்க்கரை நோய் கண்டறிதல் முகாம் நடத்தியுள்ளோம்.

முகாமை துவக்கி வைத்தவர், கலசலிங்கம் பல்கலைக்கழக இயக்குநர்முனைவர்  S சசி ஆனந்த்  அவர்கள்.

இம்முகாமிற்கு S ராமச்சந்திரபுரம் சாலியர் ஜவுளி வியாபாரிகள் சங்கத் தலைவர் திரு S.P. நாராயணன் அவர்கள், செயலாளர் திரு G. ஆதி நாராயணன் அவர்கள், பொருளாளர் திரு M. காளிமுத்து அவர்கள் சங்க உறுப்பினர்கள் திரு M.சடையாண்டி ஆசிரியர் அவர்கள், திரு. E.ராஜமாணிக்கம் அவர்கள், திரு.மீ.பழனிச்சாமி அவர்கள், திரு..தவசியானந்தம் அவர்கள், திரு கு.சிவகுருநாதன் அவர்கள், திரு. .பாலசுப்ரமணியம் அவர்கள்,  திரு.சு.நாச்சியப்பன் அவர்கள், திரு.இரா.இராஜகுரு அவர்கள், திரு.N.ஆனந்தகுமார் அவர்கள், சுந்தரபாண்டியம் மாடசாமி அவர்கள் மற்றும் பலரும் கலந்து கொண்டார்கள்.
 
முகாமில் நடந்த சில துளிகள்.

S ராமச்சந்திரபுரம் சாலியர் ஜவுளி வியாபாரிகள் சங்கம் மற்றும் சங்கரா கண் மருத்துவமனை இணைந்து நடத்திய இம்முகாமில் சுமார் 300 நபர்களுக்கு சங்கரா கண் மருத்துவமனை மருத்துவர்களால் கண் பரிசோதனை செய்யப்பட்டு அவர்களில் 30 நபர்களுக்கு சங்கரா கண் மருத்துவமனையில்  இலவசமாக கண்  அறுவைசிகிச்சை செய்யப்பட்டது.
  
இந்த முகாமிற்கு வந்த நாற்பது வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும்  சர்க்கரை நோய் சிறப்பு மருத்துவர் Dr. M.பாரி M.D, D.Diab  அவர்களால் பரிசோதனை செய்யப்பட்டு தேவை-யான நபர்களுக்கு முப்பது நாட்களுக்-கான மருந்துகள் இச்சங்கம் மூலம் இலவசமாக அளிக்கப்பட்டது.

இந்த முகாமிற்கு வந்த குழந்தைகளுக்கு, குழந்தைகள் நல சிறப்பு மருத்துவர்கள் Dr.C.ராமசாமி, DCH மற்றும் Dr.M.பழனிச்சாமி, DCH அவர்களால் பரிசோதனை செய்து அவர்களின் ஆலோசனை பேரில் அக்குழந்தைகளுக்கு தேவையான மருந்து மாத்திரைகள் மற்றும் சொட்டு மருந்துகள் யாவும் இச்சங்கம் மூலம் இலவசமாக வழங்கப்பட்டது.

இந்த முகாம் எங்களுக்கு ஒரு முன்னோடியே இனி வரும் காலத்தில் பொது மருத்துவம், இருதய நோய் சிறப்பு மருத்துவர், ரத்த கொதிப்பு நோய் சிறப்பு மருத்துவர், எலும்பு முறிவு  சிறப்பு மருத்துவர், சர்க்கரை நோய் மற்றும் குழந்தைகள் நல சிறப்பு மருத்துவர் போன்ற அனைத்து விதமான சிறப்பு மருத்துவர்களை வைத்து ஒரு மாபெரும் மருத்துவ முகாமை நடத்த திட்டமிட்டுள்ளோம்.

இம்முகாமை துவக்கி வைத்த கலசலிங்கம்  பல்கலைக் கழகத்தின் இயக்குநர் முனைவர் S. சசி ஆனந்த் அவர்களுக்கு எங்களது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
 

இம்முகாமில் நோயாளிகளுக்கு பரிசோதனை செய்த சங்கரா கண் மருத்துவமனை மருத்துவர்கள், பணியாளர்கள், சர்க்கரை நோய் சிறப்பு மருத்துவர்  Dr. M. பாரி, ராஜபாளையம்குழந்தைகள் நல சிறப்பு மருத்துவர்கள்  Dr. C.ராமசாமி, சின்னமன்னூர் மற்றும்   Dr. M.பழனிச்சாமி, S.ராமச்சந்திரபுரம்             ஆகியோர்களுக்கு எமது நெஞ்சார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக்  கொள்கிறோம்

இம்முகாமிற்கு இட வசதியை ஏற்படுத்தி தந்து உறுதுணையாக இருந்த கலைமகள் பள்ளி நிர்வாகிகள், ஆசிரியர்கள், மாணவர்கள், ஊர்ப் பொது மக்கள், மற்றும் எங்கள் சங்க உறுப்பினர்கள் அனைவருக்கும் எமது இதயம் கனிந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

இவண்
S.P. நாராயணன்தலைவர்,
S.ராமச்சந்திரபுரம் சாலியர் ஜவுளி வியாபாரிகள் சங்கம்,
S.ராமச்சந்திரபுரம்
அலைபேசி: +91 94420 22331, 
Email: narayanan.rcpm@gmail.com