Latest posts

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

ஞாயிறு, 28 அக்டோபர், 2018

புட்டபர்த்தி சாய் பாபா அறக்கட்டளை வழங்கும் இலவச மருத்துவ சேவை.





ஸ்ரீ சத்ய சாய் இன்ஸ்ட்டிடியூட் ஆப் மெடிக்கல் சயின்சஸ், ஒயிட்ஃபீல்ட், பெங்களூரு, 560 066 தொலைபேசி0091-80-28004600/28411500 இணையதளம்:https://sssihms.org

இந்த மருத்துவமனையின் சிறப்பம்சங்கள்:

1.     அனைத்து வித மருத்துவ சேவைகளும் இலவசமாக வழங்கப்படுகிறது.

2.     இந்த மருத்துவமனையில் பில் மற்றும் பணம் பெறுவதற்காக எந்தவொரு இடமும் இங்கு உருவாக்கப்படவில்லை.

3.     இந்த மருத்துவமனையில் முதலில் வருபவருக்கு முன்னுரிமை என்ற அடிப்படையில் அவசர சிகிச்சை பிரிவில் சிகிச்சை வழங்கப்படுகிறது.

4.     இங்கு சிகிச்சை பெற வரும் அனைவருக்கும் அறிவுறுத்தப்படுவது என்னவென்றால் இங்கு யாருக்கும் பணம் கொடுக்கத் தேவையில்லை என்பதுதான். மருத்துவமனை நிர்வாகத்திற்கும், பணிபுரியும் பணியாளர்கள் எவருக்கும் யாரும் ஒரு ரூபாய் கூட கொடுக்கத் தேவையில்லை.

5.     சிகிச்சை தேவைப்படும் யாவரும் தங்களது மருத்துவ பரிசோதனை முடிவுகளை இமெயில் மூலமாக கீழ்க்கண்ட முகவரிக்கு அனுப்பி வைக்கும்படி கேட்டுக்கொள்கிறார்கள்adminblr@sssihms.org.in.

6.     மேலும் தங்களது மருத்துவ பரிசோதனை அறிக்கைகளின் நகல்களை கீழ்க்கண்ட முகவரிக்கு அனுப்பி வைக்கும்படி கேட்டுக்கொள்ளப் படுகிறார்கள்.

7. To,
Patient correspondence cell
Sri Sathya Sai Institute of Higher Medical Sciences,
EPIP area, Whitefield
Bangalore – 560066

Karnataka

8.     மேலும் தங்களது பெயர், முகவரி, இமெயில் மற்றும் செல்பேசி எண்ணுடன் தொடர்பு கொள்ளவும்.

9.     மருத்துவர்கள் ஆவணங்களைப் பரிசீலனை செய்து, தேவையான உதவிகள் செய்வார்கள்.


10.   மாலை 4 முதல் 6 மணி வரை தங்கள் உறவினர்கள் சிகிச்சை பெறும் நபர்களை சந்திக்க வாய்ப்பளிக்கப்படும்.



வியாழன், 11 அக்டோபர், 2018

தமிழ்நாடு சாலியர் மகாஜன சங்கம் பில்டிங் ட்ரஸ்ட், சென்னை - கல்வி ஊக்கத் தொகை வழங்குதல்

அன்புடையீர்,


2017-18 ஆம் கல்வியாண்டில் 10, 11 மற்றும் 12ம் வகுப்புகளுக்கு நடைபெற்ற அரசு பொதுத் தேர்வுகளில் அதிக மதிப்பெண்கள் பெற்ற சாலியர் சமுதாயத்தைச் சேர்ந்த மாணவ மாணவிகளுக்கு சென்னை தமிழ்நாடு சாலியர் மகாஜன சங்கம் பில்டிங் ட்ரஸ்ட் சார்பாக கல்வி ஊக்கத்தொகை வழங்கயிருப்பதால் தங்கள் ஊரில் 10ம் வகுப்பு பொதுத் தேர்வில் 475 மதிப்பெண்களுக்கு மேலும், 11ம் வகுப்பு பொதுத்தேர்வில் 550 மதிப்பெண்களுக்கு மேலும் மற்றும் 12ம் வகுப்பு பொதுத் தேர்வில் 1150 மதிப்பெண்களுக்கு மேல் பெற்ற மாணவ, மாணவிகளின் பெயர் பட்டியலை, மதிப்பெண் பட்டியலின் (Mark Sheet) சான்றளிக்கப்பட்ட நகலுடன், பெற்றோர் பெயர், முகவரி மற்றும் தொலைபேசி எண் ஆகிய விபரங்களுடன் கீழ்க்கண்ட முகவரிக்கு 30-11-2018 தேதிக்குள் அனுப்பி வைக்க ஆவன செய்ய அன்புடன் வேண்டுகிறோம். பெறப்படும் பட்டியலின் அடிப்படையில் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவ, மாணவிகள் தேர்ந்தெடுக்கப்பட்டு ஊக்கத்தொகை வழங்கப்படும்.

அனுப்ப வேண்டிய முகவரி:
தமிழ்நாடு சாலியர் சமுதாய மாளிகை,
25/53, கணபதி தெரு,                                                           
மேற்கு மாம்பலம்,
சென்னை – 600 033
தொலைபேசி: 044 24803127                                                                                              


                                                தங்கள் அன்பிற்குரிய,

                                                           மேலாளர்
                                 தமிழ்நாடு சாலியர் மகாஜன சங்கம்
                                             பில்டிங் ட்ரஸ்ட், சென்னை 

புதன், 3 அக்டோபர், 2018

மாணவர்களின் முன்னேற்றத்தில் எஸ். இராமச்சந்திராபுரம் ஜவுளி வியாபாரிகள் சங்கத் தலைவர் திரு. எஸ்.பி. நாராயணன் அவர்களது சேவை

பயிற்சியில் கலந்து கொண்ட மாணவிகள் மற்றும் மாணவிகளின் பெற்றோருடன்  திரு. எஸ்.பி.என். ஆனந்தக்குமார்.  உடன் திருநெல்வேலி ட்வின் சிட்டி ரோட்டரி சங்க உறுப்பினர்களும்




ரோட்டரி சங்கங்கள் நம் நாட்டின் வருங்கால தூண்களாக இருக்கும் மாணவர்களுக்கு தலைமைப் பண்பு, திறன் மேம்பாடு மற்றும் சுய முன்னேற்றத்திற்கான பயிற்சி வகுப்புகள் நடத்தி அதன் மூலம் இளம் தலைமுறையினரின் முன்னேற்றத்தில் பெரும்பங்கு வகிக்கின்றன. 

ரோட்டரி சங்கங்களின் 3212 மாவட்டம் சார்பாக ‘சிகரம் தொடுவோம்’ என்ற நான்கு நாட்கள் பயிற்சி வகுப்பு கடந்த 29-09-2018 முதல் 02-10-2018 வரை திருநெல்வேலியில் ஜெயேந்திரர் வெள்ளிவிழா பள்ளியில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த பயிற்சிக்காக பல்வேறு இடங்களிலிருந்து 11ம் வகுப்பு பயிலும் மாணவர்கள் கலந்து கொண்டனர். எஸ். இராமச்சந்திராபுரம் ஜவுளி வியாபாரிகள் சங்கத் தலைவர் திரு. எஸ்.பி. நாராயணன் அவர்களது முயற்சியின் பேரில் திருநெல்வேலி ட்வின் சிட்டி ரோட்டரி சங்கத்தின் சார்பாக கலைமகள் மேல்நிலைப்பள்ளி 11ம் வகுப்பு மாணவிகள்  சுந்தரபாண்டியம் செல்வி. எஸ். ஆனந்தப் பிரியா மற்றும் எஸ். இராமச்சந்திராபுரம் செல்வி எஸ். மகாலட்சுமி ஆகிய இருவரும், பள்ளியின் தலைமையாசிரியர் சிரு. பி. சிவகாமிநாதன் அவர்களால் தேர்வு செய்யப்பட்டு, கலந்து கொண்டனர். இந்த இரு மாணவிகள் பயிற்சியில் கலந்து கொள்வதற்கான செலவுகளை எஸ். இராமச்சந்திராபுரம் ஜவுளி வியாபாரிகள் சங்கமும், திருநெல்வேலி ட்.வின் சிட்டி ரோட்டரி சங்கமும் ஏற்றுக் கொண்டது. 

புயிற்சியின் முடிவில் மாணவிகளுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது. பயிற்சியில் கலந்து கொண்ட மாணவிகளை எஸ். இராமச்சந்திராபுரம் ஜவுளி வியாபாரிகள் சங்கத் தலைவர் திரு. எஸ்.பி. நாராயணன் மற்றும் அவரது மகன் திரு. எஸ்.பி.என். ஆனந்தக்குமார் இருவரும் வாழ்த்தினர். 

இளம் தலைமுறையின் முன்னேற்றத்தில் பெரிதும் அக்கறை கொண்டு பல வளர்ச்சித் திட்டங்களை செயல்படுத்தி வரும் ரோட்டரி சங்கத்தில் பொறுப்பு வகிக்கும் இராமச்சந்திராபுரம் ஜவுளி வியாபாரிகள் சங்கத் தலைவர் திரு. எஸ்.பி. நாராயணன் மற்றும் அவரது மகன் திரு. எஸ்.பி.என். ஆனந்தக்குமார் (செயலர், ட்வின் சிட்டி ரோட்டரி சங்கம்) இருவரின் பணி மென்மேலும் சிறக்க சாலியர் குரல் வாழ்த்துகிறது. 

இளம் தலைமுறையின் முன்னேற்றத்தில் ஆர்வமுடன் செயலாற்றும் திரு. எஸ்.பி.என். ஆனந்தக்குமார் அவர்களை பாராட்டுவதன் மூலம் அவரது பணிகளை ஊக்கப்படுத்துவோம். தொடர்பு கொண்டு வாழ்த்த விரும்புவோர் அவரது செல்பேசி எண். 98417 50510 அல்லது 0462 2329051 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு அவரது பணி சிறக்க வாழ்த்துவோம்.

இந்த வலைப்பூ இலாப நோக்கமின்றி செயல்படுத்தப்படுகிறது. நீங்கள் இந்த வலைப்பூவில் உள்ள ப்ளிப்கார்ட் மற்றும் அமேசான் இணைப்புகள் மூலம் உங்களுக்குத் தேவையான பொருட்கள் வாங்குவதன் மூலமாக இந்த வலைப்பூ செயலாக்கத்திற்கான செலவுகளை ஈடு செய்ய உங்களை வேண்டி விரும்பிக் கேட்டுக் கொள்கிறேன். 

க. சங்கிலிக்காளை, சாலியர் குரல் இணையப் பிரிவு