Latest posts

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

சனி, 24 பிப்ரவரி, 2018

போத்தீஸ் பெங்களூரு கிளை திறப்பு விழா 26.02.2018 திங்கள் காலை 10 மணியளவில்




1923ம் ஆண்டு ஸ்ரீவில்லிப்புத்தூர் கே.வி. போத்தி மூப்பனார் அவர்களால் தமது சொந்தத் தறிகளில் நெய்த வேஷ்டி, சேலைகளை விற்பனை செய்யும் நிறுவனமாக துவங்கப்பட்ட போத்தீஸ் நிறுவனம் அவரது குமாரர் திரு. கே.வி.பி. சடையாண்டி மூப்பனார் அவர்களது நிர்வாகத் திறமையினால் 1977ம் ஆண்டில் ஸ்ரீவில்லிப்புத்தூர் நகரில் ஜவுளி சாம்ராஜ்யத்தின் முதல் கடை துவங்கப்பட்டு அப்போதுதான் போத்தீஸ் என்ற பெயரிடப்பட்டு வியாபாரம் ஆரம்பிக்கப்பட்டது. அதன் பின்னர் 1986ம் ஆண்டில் திருநெல்வேலி மாநகரில் இரண்டாவது கடை துவங்கப்பட்டது. அந்நாளில் கேரள மாநிலத்தவர்கள் அதிகமாக திருநெல்வேலி நகருக்கு வந்து ஜவுளி வாங்கிச் செல்வர்

அவ்வாறு கேரள மாநிலத்திலிருந்து வருகை தந்த தம் வாடிக்கையாளர்களுக்கு அவர்களது பயணச் செலவை போத்தீஸ் நிறுவனமே ஏற்றுக்கோண்டு அவர்களுக்கு டிக்கெட் கட்டணத்தை திருப்பியளித்ததன் மூலமாகவும் தரத்தில் என்றுமே சமரசம் செய்யாத போத்தீPஸ் நிறுவனத்தை நாடி மக்கள் கூட்டம் கடை முழுவதும் வியாபித்து தம் குடும்பத்திற்குத் தேவையான ஆடைகளை வாங்கிச் சென்றனர்.

ஆடித் தள்ளுபடி என்பதை சென்னை மாநகர மக்களுக்கு அறிமுகப்படுத்தியதே போத்;தீஸ் நிறுவனம்தான் என்று நம்மி;ல் பலருக்கு தெரிந்திருக்காது.

சென்னை, தி.நகர், பனகல் பூங்கா அருகில் போத்தீஸ் கிளை துவங்கிய பின்னர்தான் சென்னை மக்களுக்கு ஆடித்தள்ளுபடி என்ற விஷயமே அறிமுகமானது. சென்னை மாநகரில் போத்தீஸ் பொட்டிக் எனும் இரண்டாவது கிளை, ஜி.என்.செட்டி சாலையிலும், மூன்றாவது கிளையாக போத்தீஸ் ஹைப்பர் எனும் மூன்றாவது கிளை தி.நகர் பேருந்து நிலையம் அருகிலும் தம் சாம்ராஜ்யத்தை விரிவுபடுத்தி தமிழ்நாடு முழுவதும் தம் கிளைகளை பரப்பியிருக்கும் ஆலமரம் போத்தீஸ்.  

தற்போது ஸ்ரீவில்லிப்புத்தூர், திருநெல்வேலி, மதுரை, சென்னை, கோயம்புத்தூர், திருச்சி, நாகர்கோவில், புதுச்சேரி, திருவனந்தபுரம் மற்றும் தற்போது பெங்களூரு மாநகர் என தனது சாம்ராஜ்ஜியத்தை விரிவு செய்து வளர்ந்து வரும் போத்தீஸ் நிறுவனம் நம் சாலியர் சமுதாயத்திற்கு பெருமை தேடித்தந்துள்ளது.

மேலும் சேலம், காஞ்சிபுரம் மற்றும் சென்னை வேளச்சேரி பகுதிகளில் கிளைகள் துவக்க திட்டமிட்டிருக்கும் போத்தீஸ் நிறுவனம் அதன் நிர்வாக இயக்குநர் திரு. ரமேஷ் போத்தி மற்றும் அவர்களுக்கு உறுதுணையாக இருக்கும்; அவரது சகோதரர்கள் மற்றும் அனைத்து ஊழியர்களுக்கும் சாலியர் குரல் தன் பாராட்டுக்களையும், வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறது.

பெங்களூரு நகருக்குச் சென்ற அனைவருக்கும் தெரிந்த இடம் மெஜஸ்டிக் சர்க்;;கிள் மற்றும் கெம்பே கவுடா சர்க்கிள். இங்குதான் பெங்களூரு நகரின் ரயில் நிலையம், மாநகர, வெளியூர் பேருந்து மற்றும் மெட்ரோ ரயில் நிலையம் ஆகிய அனைத்தும் அமைந்துள்ள மாநகரின் மையப்புள்ளி இது. .
இங்கு முன்பு செயல்பட்டு வந்த சாகர் திரையரங்க இடம் 33, கெம்பே கவுடா சாலையில் தற்போது போத்தீஸ் நிறுவனத்;தின்  பெங்களூரு கிளை துவங்கப்படுகிறது.

வரும்      பிப்ரவரி 26, 2018 திங்கள் கிழமை காலை 10 மணியளவில் துவங்கப்பட இருக்கும் போத்தீஸ் பெங்களூரு கிளைக்கு நாம் அனைவரும் நம் வாழ்த்துக்களையும், ஆதரவையும் தெரிவிப்பதன் மூலம் நம் சாலியர் சமுதாயத்தின் அடையாளமாக விளங்கும் போத்தீPஸ் நிறுவனம் மென்மேலும் வளர நம் வாழ்த்துக்களையும், ஆதரவையும் தெரிவிக்க வேண்டுகிறோம்.


கட்டுரையாளர்: . சங்கிலிக்காளை, தொடர்புக்கு: 9600106471




















சனி, 10 பிப்ரவரி, 2018

இந்தியர்களிடம் அதிகரிக்கும் வைட்டமின் பி 12 குறைபாடு - நன்றி குங்குமம் டாக்டர்


Dinakaran Daily news




இந்தியர்களில் 15 சதவிகிதத்தினருக்கும் அதிகமானோர் பி 12 வைட்டமின் குறைபாட்டால் பாதிக்கப்பட்டிருப்பது தெரிய வந்துள்ளது. மேற்கத்திய உணவு கலாசாரத்தால் நார்ச்சத்துள்ள பொருட்களின் நுகர்வு பெருமளவு குறைந்திருப்பதும், அதிக அளவு மதுப்பழக்கமும் இதற்கு முக்கிய காரணம்’ என்று ஆராய்ச்சியாளர்கள் கூறியிருக்கிறார்கள்.

டி.என்.ஏ., நரம்பு மற்றும் ரத்த அணுக்கள் உருவாக உதவுகிற அதிகார மையமாக உள்ளது வைட்டமின் பி12. இது மூளை, நோய் எதிர்ப்பு அமைப்பு மற்றும் வளர்சிதை மாற்றத்தின் ஆரோக்கியத்தை உறுதிப்படுத்துவதிலும் முக்கியப் பங்கு வகிக்கிறது.

இத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த வைட்டமின் பி 12 குறைபாடு ஏற்படும்போது ரத்த சிவப்பணுக்களின் உற்பத்தி குறைந்து அனீமியா என்கிற ரத்தசோகை ஏற்பட வழிவகுக்கிறது. மேலும் நரம்பு செல்கள் மற்றும் அதன் செயல்திறனிலும் பாதிப்பு ஏற்படுகிறது. 50 வயதுக்கு மேலானவர்களுக்கு செரிமான பிரச்னைகள் ஏற்படுகிறது.

வளர்கிற குழந்தைகளிடம் நோய் எதிர்ப்பு மண்டலத்திலும் பிரச்னைகளை ஏற்படுத்துகிறது பி12 குறைபாடு. இந்த சத்து குறைபாட்டை முட்டை, பால், இறைச்சி போன்ற பிற விலங்கு சார்ந்த உணவுப் பொருட்களை குறிப்பிட்ட கால இடைவெளிகளில் சேர்த்துக் கொள்வதன் மூலம் தவிர்க்கலாம். மதுப்பழக்கமும், துரித உணவுக்கலாசாரமும் உணவிலிருக்கும் வைட்டமின் பி 12 நமக்குக் கிடைப்பதைத் தடை செய்கின்றன என்பதால் அவற்றைத் தவிர்ப்பதும் அவசியம்.

மருத்துவர்கள் பரிந்துரைக்கும் பட்சத்தில் ஊசிகள், மாத்திரைகள் அல்லது கூடுதல் சிகிச்சைகள் போன்றவற்றின் மூலமும் சரிசெய்து கொள்ளலாம். பி12 குறைபாடு கொண்டவர்கள் வருடத்துக்கு ஒருமுறை ரத்தப் பரிசோதனை செய்து கொள்வதும் நல்லது என்று ஆய்வாளர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.