Latest posts

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

செவ்வாய், 18 ஏப்ரல், 2023

சாலியர் சமுதாய மாளிகை மராமத்து பணிகள் பற்றிய அறிவிப்பு

 





சாலியர் சமுதாய மாளிகை மராமத்து பணிகள் பற்றிய அறிவிப்பு


நமது மக்கள் சென்னைக்குச் சென்றால் தங்குவதற்கு ஒரு பாதுகாப்பான, குறைந்த கட்டணத்தில் தங்கும் வசதியை ஏற்படுத்த வேண்டும் என்ற ஒரு உயரிய எண்ணத்தில் நம் சமுதாயப் பெரியவர்களின் பெரும் முயற்சியால் பொதுமக்கள் மற்றும் தொழிலதிபர்களின் பங்களிப்போடு, சென்னை 600 033, மேற்கு மாம்பலம், கணபதி தெரு, கதவு எண். பழையது 25, புதியது 53 என்ற முகவரியில் ஒரு சமுதாய மாளிகை கட்டப்பட்டு கடந்த 1997 ம் வருடம் திறந்து வைக்கப்பட்டு அதுநாள் முதல் நம் சமுதாய மாணவர்கள், வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் சென்னை மாநகருக்கு செல்லும்போது தங்குவதற்கு பெரும் உதவியாக இருந்தது. கடந்த 26 வருடங்களாக நம் மக்களுக்கு ஒரு பாதுகாப்பான, குறைந்த வாடகையில் தங்குவதற்கு இடமளித்து வந்த நம் சமுதாய மாளிகை, பராமரிப்புப் பணிகளுக்காக வரும் 01.05.2023 நாள் முதல் பராமரிப்பு பணி முடியும் வரை தங்கும் வசதி நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

கடந்த சில மாதங்களாகவே பராமரிப்பு பணிகள் குறித்து நிர்வாகிகள் ஆலோசித்து வந்த நிலையில், சாலியர் மாளிகைக் கட்டிடத்தில் பெரும் மராமத்து வேலைகள் செய்ய வேண்டிய நிலையில், கட்டிடத்தில் நம் மக்கள் தங்கியிருக்கும்போதே மராமத்து வேலைகள் செய்ய இயலாத வகையில் அதிகமான வேலைகள் இருப்பதால் கடந்த 16.04.2023 அன்று நிர்வாகிகள் மற்றும் அறக்கட்டளை உறுப்பினர்கள் கூட்டத்தில் உரிய ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டு, வேறு வழியின்றி தங்கியிருக்கும் அனைவரும் தற்காலிகமாக 30.04.2023 க்குள் காலி செய்யவும், மராமத்து பணிகள் முடிந்தவுடன் மீண்டும் தங்குவதற்கு அனுமதிக்கவும் ஒருமனதாக முடிவு செய்யப்பட்டு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. நிர்வாகத்தின் அறிவிப்பு இங்கு தகவலுக்காக பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. 

எனவே நம் சமுதாய மக்கள் அனைவரும் சிரமத்தை பொறுத்தருளுமாறு கேட்டுக் கொள்வதுடன், இத்தகவலை நம் சாலியர் மக்கள் வசிக்கும் அனைத்து பகுதிகளுக்கும் தெரிவிப்பதன் மூலம், விபரம் தெரியாமல் யாரும் சென்னை சென்று சாலியர் மாளிகையில் தங்குவதற்கு இடமில்லாமல் சிரமப்படுவதை தவிர்க்க உதவி செய்ய வேண்டும். 

சென்னை சாலியர் சமுதாய மாளிகையின் தொலைபேசி எண். 044 24803127



திங்கள், 2 ஜனவரி, 2023

தானத்தில் சிறந்தது அறிவு தானம்


எழுத்தறிவித்தவன் இறைவன் ஆவான் எனும் முதுமொழிக்கேற்ப எளிய மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்த கல்வி எனும் அறிவு மேம்படச் செய்தல் ஒன்றே உங்களின் வாழ்வில் மிகச் சிறந்த ஒரு சேவையாக இருக்க முடியும்

சென்னை, மயிலாப்பூரைச்; சேர்ந்த திரு. இரா. கண்ணன் (இளவேனில்) தன் நண்பர்கள் சிலருடன் இணைந்து கடந்த 20 ஆண்டுகளாக குழந்தைகள் வாழ்வு மேம்பட நல்லெண்ணத்துடன் சமுதாயப் பணி செய்து வருகிறார்.

குழந்தைகள் மத்தியில் வாசிப்புப் பழக்கத்தை ஏற்படுத்துவதன் மூலம் அக்குழந்தைகளின் வாழ்க்கையில் நல்ல மாற்றத்தினை ஏற்படுத்தும் சேவையை திறம்பட செய்து வருகிறார்.


தனது தனிப்பட்ட ஆர்வத்தின்பேரில் குழந்தைகளுக்கான புத்தகங்களை சேகரித்து,
 சென்னையின் குடிசைப்பகுதி வாழ் குழந்தைகளுக்கும், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டத்தின் கிராமப் பகுதிகளில் உள்ள ஏழை, எளிய மக்களின் குழந்தைகளுக்கும், இரவுப்பாடசாலையில் பயிலும் குழந்தைகளுக்கும் கொடுத்து அவர்களின் வாசிப்பு பழக்கத்தை மேம்படுத்தி வருகிறார்.

புத்தகங்கள் வாயிலாக குழந்தைகளிடம் நற்பண்புகள், சமத்துவம், சகோதரத்துவம், நாட்டுப்பற்று, மூடநம்பிக்கையை ஒழித்தல், அறிவியல் அறிவை வளர்த்தல் போன்ற நல்லவிதமான மாற்றங்களைக் கொண்டு வர சேவை செய்யும் திரு. இரா. கண்ணன் (இளவேனில்) அவர்களைப் பாராட்ட விரும்புபவர்கள் அவரது தொடர்பு எண். 88380 01758 எனும் எண்ணில் தொடர்பு கொண்டு பாராட்டலாம். முடிந்தால் அவரது சேவைக்குறிய குழந்தைகளுக்கான புத்தகங்களை நன்கொடையாக கொடுத்து உதவலாம்.

தேவையான புத்தகங்கள்:


குழந்தைகளுக்கான எளிய சிறு நூல்கள்
புடங்களுடன் கூடிய கதைப் புத்தகங்கள்
நீதிக் கதைகள் கொண்ட புத்தகங்கள்
தன்னம்பிக்கை ஊட்டக் கூடிய நூல்கள்
ஆங்கிலப் பேச்சுத்திறனை வளர்க்கும் நூல்கள்
ஆங்கிலம் தமிழ் அகராதி
பொது கட்டுரைகள்
தலைவர்களின் வரலாறு அல்லது சுயசரிதை நூல்கள்
பாரதியார் மற்றும் பாரதிதாசன் கவிதைகள நூல்கள்.
திருக்குறள் மற்றும் விளக்கவுரை நூல்கள்
 
நீங்கள் எந்தவகையில் உதவலாம்:
புத்தகங்களை வாங்கி வழங்கலாம்
புத்தகங்களுக்கான நிதி கொடுக்கலாம்.
தொலைபேசியில் தகவல் தெரிவித்தால் நேரில் வந்து பெற்றுக் கொள்வார்கள்.
தன்னார்வலராக இணைந்து கொள்ளலாம்.
 
ஒரு கோடி கிடைத்தால் என்ன செய்வீர்கள் என கேட்டதற்கு, ஒரு நூலகம் கட்டுவேன் என பதிலளித்தாராம் மகாத்மா காந்தி அவர்கள்.

தனிமைத் தீவில் தள்ளப்பட்டால் என்ன செய்வீர்கள் என்று கேட்டபோது, புத்தகங்களுடன் மகிழ்ச்சியாக வாழ்வேன் என பதிலளித்தாராம் பண்டித ஜவகர்லால் நேரு அவர்கள.

ஒரு குழந்தைக்கு நீங்கள் வாங்கித்தரும் ஆகச் சிறந்த பரிசு புத்தகம்தான் என்றார் வின்ஸ்டன் சர்ச்சில்

எனவே உங்கள் வாழ்க்கையில் நீங்கள் செய்யும் மிகச்சிறந்த சமூக சேவையாக உங்களால் முடிந்த புத்தகங்களை ஏழை எளிய குழந்தைகளுக்கு வழங்குவதன் மூலம் எதிர்காலத்தில் நற்பண்புள்ள இளைஞர்களாக அக்குழந்தைகள் வளர பேருதவி செய்தவர்களாவீர்கள்.

உங்களின் ஒரு சிறிய உதவி மூலமாக சமூகத்தில் ஏற்படும் மாற்றமானது பெரும் நன்மைகளை  விளைவிக்கும்.


தொடர்புக்கு:
இரா. கண்ணன் (இளவேனில்) செல்பேசி எண். 88380 01758
29 காந்தி நகர், சண்முகபுரம், மைலாப்பூர், சென்னை  600 004



கட்டுரையாளர்சங்கிலிக்காளை, ஆலோசகர்.

தொடர்புக்கு: 9600106471  gsraj1979@gmail.com


பொறுப்புத் துறப்பு: 

இக்கட்டுரையில் இடம்பெறும் கருத்துக்கள் அனைத்தும் கட்டுரையாளரின் சொந்தக் கருத்துக்களே. சாலியர் குரல் மற்றும் அதன் நிறுவனர்ஆசிரியர்துணை ஆசிரியர் மற்றும் தொடர்புள்ள அலுவலர்கள்பணியாளர்கள் மற்றும் செய்தித் தொடர்பாளர்கள் ஆகிய எவருக்கும் எவ்வித பொறுப்பும் கிடையாது என்பதை அறிந்து கொள்ளவும். 

மேலும் இங்கு உபயோகப் படுத்தப்பட்டுள்ள படங்கள்சின்னங்கள் (லோகோ) மற்றும் இணையதள முகவரி ஆகியவை அதன் உரிமையாளர்களுக்குச் சொந்தமானவை. தகவலுக்காக மட்டுமே இங்கு அவை பயன்படுத்தப் பட்டுள்ளன.