Latest posts

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

சனி, 19 நவம்பர், 2022

செல்லிடப்பேசி - நாம் செல்லுமிடமெல்லாம் உடன்வரும் காவலன் – சாலைப் பாதுகாப்பு விழிப்புணர்வு

கடந்த 06ம் தேதி நண்பருடன் சென்னையிலிருந்து விழுப்புரம் வழியாக விருத்தாசலம் சென்று  கொளஞ்சியப்பர் சுவாமியை தரிசித்து வந்தேன். விழுப்புரம் தாண்டிச் செல்லும் வழியில் உளுந்தூர்பேட்டைக்கு முன்னதாகவே நெடுஞ்சாலையில் அமைந்துள்ள பாலாஜி ஆர்யாஸ் ஹோட்டலில் சுவையான மதிய உணவை முடித்துவிட்டு இருவருக்கான மதிய உணவுக்கு வெறும் 220 ரூபாய் கட்டணைத்தை ஆச்சர்யத்துடன் செலுத்திவிட்டுக் கிளம்பிய சிறிது தூரத்தில் சாலையோரம் சிறு கூட்டம் சேர்ந்ததைக் கண்டு வாகனத்தை நிறுத்தி. என்னவென விசாரித்தபோது ஒருவர் இரு சக்கர வாகனத்தில் இருந்து தடுமாறி கீழே விழுந்து. மயக்கநிலையில் இருந்தார். சுற்றியிருந்தவர்களுக்கு என்ன செய்வதென்றே தெரியாமல் தடுமாறிக் கொண்டிருந்த நிலையில். என்னுடன் வந்த நண்பர் மேற்படி விபத்தில் சிக்கிய நபரின் பாக்கெட்டிலிருந்து விழுந்து கிடந்த மொபைல் போனை எடுத்து அதில் விபத்தில் சிக்கிய நபரின் குடும்ப உறுப்பினர்களின் தொடர்பு எண் இருக்கிறதா என தேட ஆரம்பித்தார். மோபைல் போன் லாக் செய்யப்பட்டிருந்தது. அதன் உரிமையாளரோ மயக்க நிலையில் இருந்த நிலையில், அந்த ஆன்ட்ரர்ய்டு போனில் எமெர்ஜென்சி எண்கள் சேமிக்கப் பட்டிருந்ததால் லாக் ஆகியிருந்த நிலையிலும் அதில் இருந்த உறவினர்கள் 
, நண்பர்களுக்கு தகவல் தெரிவித்தார். ஆபத்தில் சிக்கிய நபர் அருகிலுள்ள கிராமத்தைச் சேர்ந்தவர் என்பதால் சிறிது நேரத்தில் உறவினர்கள் வந்து அந்த நபரை மருத்துவ உதவிக்காக அழைத்துச் சென்றனர்.

அப்போது எனக்குள் எழுந்த சிந்தனையின் விளைவே இந்தப் பதிவு. இன்றைய நவீன உலகில் நாம் அனைவரும் ஆன்ட்ராய்டு அல்லது ஐபோன் உபயோகப் படுத்துகிறோம். ஆனால் அவற்றில் உள்ள அனைத்து அம்சங்களையும் தெரிந்து உபயோகப்படுத்துகிறோமா? ஏன்று கேட்டால். இல்லை என்பதே நம்மில் பெரும்பாலானோரின் பதிலாக இருக்கிறது.

ஒரு பேச்சுக்கு, நீங்கள் வெளியில் செல்லும்போது உங்களது செல்போனை எங்கோ தவறவிட்டு விட்டுவிட்டீர்கள் என வைத்துக் கொள்வோம். ஆந்த செல்போனை யாரோ ஒருவர் கண்டெடுத்த நிலையில், அந்த செல்போன் யாருடையது, எவ்வாறு தொடர்பு கொண்டு செல்போனை ஒப்படைப்பது என்ற கேள்விக்கும் நம்மிடம் பதில் இல்லை என்பதே நிதர்சனமான உண்மை.; நாம் நமது உறவினர்கள் அல்லது நண்பர்களின் தொலைபேசி எண்ணை எமெர்ஜென்சி தொடர்பில் பதிவு செய்து வைத்திருந்தால், லாக் எடுக்காமலேயே எமெர்ஜென்சி தகவலில் சேமிக்கப்பட்ட எண்ணைத் தொடர்பு கொண்டு உரியவரிடம் அந்த செல்போனை ஒப்படைக்க முடியும்.

இதுபோல் தேவைப்படும் சமயங்களில் மிகவும் உபயோகமான இந்த “எமெர்ஜென்சி தகவல்பற்றி அனைவரும் விரிவாக தெரிந்துகொள்ள வசதியாக கீழே கில யூடுயூப் வீடியோ இணைப்புகளை கொடுத்துள்ளேன். அனைவருக்கும்
விழிப்புணர்வு ஏற்படுத்துவதன் மூலம் யாரோ ஒருவரது உயிர் அல்லது உடமை காப்பாற்றப்படுமாயின்
, இந்த சமூகத்தின் நன்மைக்கு நான் செய்யும் சிறு பங்களிப்பாக இந்த விழிப்புணர்வு கட்டுரை அமைந்ததற்குமிகவும் மகிழ்ச்சியடைவேன்.

முடிந்தவரை இக்கட்டுரையில் அமைந்துள்ள கருத்துக்களை உங்கள் நண்பர்களுக்கும் தெரியப்படுத்தினால், அதன் மூலம் பலரது உயிர் அல்லது உ;;டமைகளைக் காப்பாற்றிய நன்றிக்குறியவராவீர்கள்.
நன்றி.
கட்டுரை: க. சங்கிலிக்காளை
தொடர்புக்கு : 9600 106471









சாலியர் குரல் நவம்பர் 2022 மாத இதழ்

 


https://drive.google.com/file/d/1npPQXyq0scg9vvnocfr6t5T12Xuq_0Np/view?usp=sharing


திங்கள், 7 நவம்பர், 2022

கேட்டதைக் குறைவின்றி கொடுக்கும் தமிழ்க்கடவுள் முருகன் அருள்மிகு கொளஞ்சியப்பர் சுவாமி

நண்பர் ஒருவருடன் ஞாயிறு காலை 06-11-2022 சென்னையிலிருந்து கிளம்பி சுமார் 230 கி.மீ. தொலைவில் விருத்தாசலம் நகரில், மணவாளநகர் பகுதியில் அமைந்துள்ள அருள்மிகு கொளஞ்சியப்பர் திருக்கோவிலுக்கு சுமார் 3.30 மணியளவில் சென்றடைந்தோம்.

இத்திருக்கோவிலின் சிறப்பு இங்கே நடைமுறையில் இருக்கும் பிராது எனும் வழக்கு பதிவு செய்யும் முறை. பங்குனி உத்திர நாளில் இங்கு திருவிழா சிறப்பாக கொண்டாடப்படுகிறது.

உங்களது வேண்டுதலை இங்கு மனுவாக இறைவனிடம் சமர்ப்பித்து, எலுமிச்சையை வேலில் பலியிட்டால் மூன்று நாள் அல்லது மூன்று வாரம் அல்லது மூன்று ஆண்டுகள் என வேண்டுதலைப் பொறுத்து நிறைவேற்றித் தருவார் நீதிபதி கொளஞ்சியப்பர். மனு சமர்ப்பிப்பதற்கு கட்டணமாக உங்கள் ஊரிலிருந்து விருத்தாசலம் நகர் வரை உள்ள தொலைவு கணக்கிடப்பட்டு ஒரு கி.மீ. க்கு 25 பைசா வீதம் மனுக்கட்டணமாக வசூல் செய்வதாக தகவல். என்னிடம் விசாரித்தபோது நான் இராஜபாளையத்தைச் சேர்ந்தவர் விருத்தாசலத்திலிருந்து சுமார் 400 கி.மீ. தொலைவு என்று சொன்னேன். என்னிடம் நூறு ரூபாய் கேட்பார்கள் என நினைத்த நிலையில் ரூ. 250 கட்டணம் கேட்டார். அதாவது தொலைவு அடிப்படையில் 25 பைசா வீதம் 100 ரூபாயும் 150 வரை பிராது கட்டணமாகவும் செலுத்த வேண்டும் என்பது எனது புரிதல். கோவிலுக்குக் கொடுக்கும்போது கணக்குப் பார்க்காமல் கொடுக்க வேண்டும் என்ற எண்ணத்தில் கேட்ட கட்டணத்தை செலுத்தி ரசீது பெற்று கோவிலின் உள்ளே சென்றோம். எனது நண்பரான சென்னையைச் சேர்ந்தவரிடம் ரூ. 200 கட்டணம் வாங்கினார்கள். 200 கி.மீ. தொலைவிற்கு கட்டணம் 200 என்றால் கி.மீ. ஒன்றுக்கு 25 பைசா வீதம் 200 கி.மீ.க்கு 50 ரூபாய் மற்றும் 150 ஆக 200 ரூபாய்  வாங்குகிறார்கள் என தெரிகிறது.


விருத்தாசலம் நகரில் அமைந்துள்ள அருள்மிகு விருத்தகிரீஸ்வரர் கோவிலுக்கு செல்வதற்கு நேரம் ஒத்துழைக்காத காரணத்தால் அருள்மிகு கொளஞ்சியப்பரிடம் பிராது கொடுத்து சென்னை திரும்பினோம்.

மேற்படி கோரிக்கைகள் நிறைவேறிய பின்னர், கோவிலுக்குச் சென்று பிராது திரும்பப் பெறும் நடைமுறையும் உள்ளது.



எனவே தங்களின் நிறைவேறாத கோரிக்கைகளை இறைவன் முருகன் வசம் மனுவாக வேண்டி கேட்டதைக் கொடுககும் கொளஞ்சியப்பர் சுவாமி அருள் பெற்று நலமுடன் வாழ வேண்டுகிறேன்.

கட்டுரையாளர்: . சங்கிலிக்காளை. தொடர்புக்கு : 9600 106471



Reference:

https://hrce.tn.gov.in/hrcehome/index_temple.php?tid=20365