Latest posts

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

வியாழன், 22 ஆகஸ்ட், 2019

குறைந்த கட்டணத்தில் மருத்துவ பரிசோதனைகள் – அண்ணா நகர் அரிமா சங்க அறக்கட்டளையின் சேவை

ADD


இன்றைய நாகரீக உலகில் மருத்துவச் சேவைகள் ஏழை, எளிய மக்களுக்கு எட்டாக் கனிகளாக மாறிவிட்டன என்பதை எவரும் மறுக்க முடியாது. அரசு மருத்துவமனைகளில் அவசர சிகிச்சைகள் பெற முடியாத நிலையில், ஏழை, எளிய மக்கள் நாடுவது தனியார் மருத்துவர்களைத்தான். 

மருந்துகள், மருத்துவ சிகிச்சைகளுக்கு ஆகும் கட்டணத்தை விட நோய்க்கான காரணத்தை கண்டறியும் பரிசோதனைகளுக்கு அதிக செலவு ஆகும் என்பதே உண்மை. உதாரணமாக சி.டி. ஸ்கேன் ஒருவருக்கு எடுக்க வேண்டும் என்று மருத்துவர் பரிந்துரைத்தால் தனியார் பரிசோதனை மையங்களில் சில, பல ஆயிரங்கள் செலவு செய்ய வேண்டும். ரத்த சர்க்கரை அளவை கண்டுபிடிக்கவே ஒவ்வொரு மையமும் சுமார் 30 முதல் 200 வரை கட்டணம் வசூலிக்கின்றனர். 


உயிர் பயம் இருக்கும் வரை மக்கள் மருத்துவத்திற்காக கடன் வாங்கியாவது அல்லது அதிகபட்சம் சொத்துக்களை விற்றாவது மருத்துவம் பார்க்கும் நிலை உள்ள வரை தனியார் கார்ப்பொரேட் மருந்துவமனைகளும், பரிசோதனை மையங்களும் மக்களிடம் பணத்தைக் கறந்து கொண்டிருப்பது தொடரும். 

இதுபோன்ற சூழ்நிலையில் ஏழை, எளிய மக்களுக்காக அரிமா சங்கம் செய்யும் சேவை மிகவும் போற்றத்தக்கது. 

தி.நகர், வெங்கட்நாராயணா சாலையில் அமைந்துள்ள லயன்ஸ் கே.ஐ.எம். மருத்துவமனை பல ஏழை எளிய மக்களுக்கு கண் பார்வைக் கோளாறுகளை சரிசெய்து வாழ்வில் ஒளியேற்றியுள்ளது.

சென்னை, அண்ணா நகர் அரிமா சங்க அறக்கட்டளையின் சார்பில், அரும்பாக்கம், பூவிருந்தவல்லி நெடுஞ்சாலையில், டி.ஜி. வைஷ்ணவா கல்லூரி வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள சுவாமி விவேகானந்தா டயக்னஸ்டிக் சென்டர் எனப்படும் பரிசோதனை ஆய்வகத்தில், மிகக் குறைந்த கட்டணத்தில் பரிசோதனைகள் செய்யப்படுகின்றன.  மக்களுக்கு மிகச்சிறந்த சேவை நோக்கில், ஆய்வகத்தை நடத்துவதற்கான செலவுகளுக்காக மட்டுமே. லாபநோக்கமின்றி குறைந்த கட்டணத்தில் மிகச்சிறந்த சேவை அளிக்கப்படுகிறது. 

காலை 7 மணி முதல் இரவு ஏழு மணி வரை, ஞாயிற்றுக் கிழமை தவிர மற்ற அனைத்து நாட்களிலும், அரசு விடுமுறை நாட்களில் கூட செயல்படும் இந்த ஆய்வகம் மக்கள் சேவையில் மகத்தான தொண்டாற்றுகிறது. ரத்த சர்க்கரை ஆய்வு, அனைத்து வித ரத்தப் பரிசோதனைகள், ஈ.சி.ஜி, எக்.ஸ்ரே,  எம்.ஆர்.ஐ., சி.டி,  அலட்ரா சவுண்ட், டெக்ஸா, டாப்ளர், எக்கோ உள்ளிட்ட அனைத்து பரிசோதனைகளும் செய்து தரப்படுகிறது. 

ஏம்.ஆர்.ஐ.,  சி.டி. ஸ்கேன், எக்கோ, டாப்ளர் போன்ற சில சேவைகளுக்கு மட்டும் காத்திருப்பைக் குறைக்கும் நோக்கில் முன்பதிவு செய்யப்பட்டு நேரம் ஒதுக்கப்படுகிறது. காலை 7 முதல் 8 மணிக்குள் முன்பதிவு செய்பவர்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்பட்டு மற்றவர்கள் காத்திருந்து சேவைகள் பெற்றுக் கொள்ளும் வகையில் எவ்வித பாகுபாடும் இல்லாமல் அனைவருக்கும் சேவை வழங்கப்படுகிறது. 

வெளியில் பல தனியார் ஆய்வகங்கள் விதிக்கும் கட்டணத்தை விட இங்கு சுமார் 5 மடங்கு குறைவாக செலுத்தி தரமான ஆய்வு முடிவுகளை பெற்று, அதன் பேரில் சிகிச்சை பெறலாம். 

தொடர்பு எண்கள் மற்றும் முகவரி தகவலுக்காக கீழே கொடுக்கப்பட்டுள்ளது. 

இந்தக் கட்டுரை நம் மக்களுக்கு ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்தி குறைந்த கட்டணத்தில் மருத்துவ பரிசோதனை செய்து கொள்ள அனைவருக்கும் வாய்ப்பளிக்கும் எண்ணத்தில், எவ்வித விளம்பர நோக்கமுமின்றி எழுதப்பட்டது. அனைவரும் பயன் பெற வேண்டுகிறோம். 

கட்டுரையாளர்: க. சங்கிலிக்காளை



SWAMI VIVENKANDA DIAGNOSTIC CENTRE
(A project of Lions Club of Anna Nagar Charitable Trust)
CT Scan, MRI Scan, Colour Doppler, Digital X-ray, Ultrasound, Echo, Dexa Scan, Comp ECG, Digital EEG, Digital EMG and Automated Clinical Lab.
Lions Edifice for Service Trust Complex,
D.G. Vaishnava College Campus,
Arumbakkam, Chennai – 600 106
Tel: 044 – 23637521 / 23637601 / 43853102, Fax. 044-23636709
Timing : 7 am to 7 pm – Monday to Saturday working including on Government holidays .
(Sunday Holiday)

Disclaimer: Logos, images, website, etc published hereby are belongs to its' respective owners and used into this blog only for informative purpose without any intention to generate monetary gains. 

வியாழன், 15 ஆகஸ்ட், 2019

சிகாகோ உலக தமிழ் ஆராய்ச்சி மாநாட்டில் நம் கூறைநாடு சாலியர் தம்பதி

சென்ற ஜுலை 4 முதல் 7 வரை அமெரிக்காவின் சிகாகோ மாநகரில் நடைபெற்ற 10வது  உலக தமிழ் ஆராய்ச்சி மாநாடு மற்றும் வட அமெரிக்கத் தமிழ் பேரவையின் பொன்விழாவை ஒட்டி நடைபெற்ற நிகழ்ச்சிகளில் நம் கூறைநாடு சாலியர் தம்பதியர்,  தத்துவஞானி சுவாமி வேதாத்திரி மகரிஷி தோற்றுவித்த உலக சமுதாய சேவா சங்க முதுநிலைப் பேராசிரியர்கள்  அருள்நிதி மாலா & அருள்நிதி ஜெயப்பிரகாஷ்  இருவரும் இரண்டு நாள் மனவளக்கலை பயிலரங்கம் நடத்தி பயிற்சி அளித்தனர்.

முதுநிலைப் பேராசிரியர் அருள்நிதி ஜெயப்பிரகாஷ் திருச்சி பெல் நிறுவனத்தில் கூடுதல் பொது மேலாளராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர். தற்போது உலக சமுதாய சேவா சங்கத்தின் விஷன் கல்வி துறையில் கூடுதல் இயக்குநராகத் தொண்டாற்றி வருகின்றார். இவர் கூறைநாடு சாலியர் மஹாஜன சங்கம் தோன்றுவதற்கு மூலவர்களில் ஒருவராகவும், கல்விவள்ளல் ஐயா கலசலிங்கம் அவர்களின் உற்ற தோழராக விளங்கிய அமரர் கூறைநாடு சுப்பிரமணியச்  செட்டியாரின் இளைய மகனாவார்.

இவரது மனைவி முதுநிலைப் பேராசிரியர் அருள்நிதி மாலா ஜெயபிரகாஷ் அவர்கள் உலக சமுதாய சேவா சங்கத்தின் திருச்சி மண்டலத்து தலைவியாக அருட் தொண்டாற்றி வருகின்றார்.

இவர்கள் பெருமுயற்சியால் திருச்சியில் ஆழியாருக்கு அடுத்த பெரிய அறிவுத்  திருக்கோயில் அழகாக அமைக்கப்பெற்று மனவளக்கலைப் பயிற்சிகள் சிறப்பாக கற்றுத்  தரப்படுகின்றன.

இந்த தம்பதியர் ஸ்ரீலங்கா, மலேசியா, சிங்கப்பூர், துபாய் மற்றும் அமெரிக்க நகரங்களில்  மனவளக்கலைப் பயிற்சிகள் அளித்துவருகின்றனர்.

வரும் செப்டம்பர் 22ம் தேதி சிகாகோ நகரில் மனைவி நல வேட்பு விழாவினை சிறப்பாக நடத்தித் தர இருக்கின்றனர்.

அமெரிக்கவாழ் நம் மக்கள் இவரைத் தொடர்பு கொள்ளலாம் =

email id -  jpmalajp@gmail.com