Latest posts

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

செவ்வாய், 20 ஜூலை, 2021

இணையவழி இலவச மருத்துவ சேவை https://www.esanjeevaniopd.in

https://www.esanjeevaniopd.in


இந்திய அரசின் மருத்துவ மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம் ஒரு தேசிய அளவிலான இலவச இணையவழி மருத்துவசேவையை துவங்கியுள்ளது. அனைத்து மாநிலங்களிலும் இந்த சேவைக்காக மாநில அரசுகள் தனியாக மருத்துவர்களை நியமித்துள்ளன. 


இணையவழியில் மருத்துரை சந்தித்து தம் பிரச்சினைகளை கூறி அதற்கான மருந்துகளுக்கான பரிந்துரைகளையும் பெற்று குணப்படுத்தும் வசதி ஏற்படுத்தப் பட்டுள்ளது. 

தங்களிடம் இணைய இணைப்புடன், கேமராவுடன் கூடிய மடிக்கணினி அல்லது இணைய இணைப்பு, கேமராவுடன் கூடிய கணினி வசதி இருந்தால் இந்த சேவையை உடனடியாக பெறலாம். 

அல்லது ஆன்ட்ராய்டு மொபைலில் செயல்படத்தக்க செயலியை தரவிரக்கம் செய்து உங்கள் ஆன்ட்ராய்ட் மொபைலில் இந்த சேவையைப் பயன்படுத்தலாம். https://play.google.com/store/apps/details?id=in.hied.esanjeevaniopd  


குறிப்பாக தனியாக வசிக்கும் மூத்த குடிமக்கள் மருத்துவமனைக்குச் செல்வதில் உள்ள சிரமங்களைத் தவிர்க்க இந்த வசதி பெரிதும் உபயோகமானதாகும். 

தங்களுக்குத் தேவையான தகவல்களை மேற்கண்ட இணையதளத்தில் சென்று தெரிந்து கொள்ளவும். 

வீட்டிலிருந்தபடி எவ்வித செலவுமின்றி இந்த மருத்துவ சேவையை அனைவரும் உபயோகித்து பலன் பெற வேண்டுகிறோம்.