Latest posts

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

புதன், 24 ஜூலை, 2019

தலைமுடி காக்கும் தும்மட்டி எனும் குமுட்டிக்காய்

முன்பெல்லாம் வயதானவர்களுக்கு மட்டுமே தலை நரைப்பது, வழுக்கை விழுவது என்ற நிலை இருந்து வந்த நிலையில், தற்போது மாறிவரும் உணவுப் பழக்கம், நீர்மாசுபாடு, மற்றும் உடலில் உள்ள புழுக்கள் அல்லது கிருமிகளின் காரணமாக சிறுவயதிலேயே தலை நரைப்பது, முடி உதிர்ந்து வழுக்கை விழுவது சாதாரணமாக அனைவருக்கும் ஏற்படுகிறது. 

முடி சம்பந்தமான பிரச்சினைகளுக்கு தீர்வு என்ற பெயரில் பல அழகுக்கலை நிலையங்கள் பல ரசாயனங்களை பயன்படுத்துவதனால் ஏற்படும் பக்க விளைவுகள், நம் சொந்தக் காசில் நமக்கு நாமே சூனியம் வைப்பதுதான். 

இயற்கை முறையில் முடி உதிர்வு, நரை, வழுக்கை போன்றவற்றிற்கு ஏதேனும் தீர்வு உள்ளதா என தேடியபோது ஒரு நாட்டு வைத்தியர் கூறிய தீர்வு தும்மட்டி எனும் குமுட்டிக்காய். உடனே இணையத்தில் தேடியபோது கிடைத்த தகவல்களை உங்களுக்காக தொகுத்து தந்துள்ளோம். 

தும்மட்டியின் பொதுவான மருத்துவக் குணங்கள் என்னவென்றால் உடலில் உள்ள புழுக்களை அழிக்கும், நச்சுக்களை முறிக்கும், மலச்சிக்கல் போக்கும், சிறுநீர்ப் பிரச்சினைகளை சரிசெய்யும், புழுவெட்டு போக்கி இழந்த முடியை மீண்டும் வளர வைக்கும். இதன் இலைகள், காய், வேர் மற்றும் பாகங்கள் அனைத்தும் மிகுந்த மருத்துவ குணமுடையவை. 

வயிறு வீக்கம் நீக்கும். வாய்வுத் தொல்லைகள் நீக்கும், பெண்களுக்கு கருப்பை சார்ந்த கோளாறுகள், நீர்க்கட்டி போன்றவற்றிற்கு சிறந்த மருந்து தும்மட்டி. 

தும்மட்டி கொடிகளை காய்களுடன் நன்கு உலர்த்தி, தூளாக்கி தினமும் இருவேளை உண்டு வர, உடலில் உள்ள நச்சுக்களும், வயிற்றுப் புழுக்களும் அழிந்து விடும். 

புழு வெட்டு காரணமாக பலருக்கு முடி உதிர்ந்த இடத்தில் மீண்டும் வளராமல், சொட்டை விழுந்து விடும். தும்மட்டிக் காயை இரண்டாக வெட்டி, தலையில் தேய்த்து சுமார் அரை மணி நேரம் முதல் ஒரு மணி நேரம் கழித்து குளிக்கலாம். இவ்வாறு தொடர்ந்து சில நாட்களுக்கு செய்துவர சொட்டைத் தலையிலும் முடி வளரும் அதிசயத்தைக் காணலாம்.

மற்றுமொரு வைத்திய முறை என்னவென்றால் கரு ஊமத்தை எனப்படும் ஊமத்தை காயை நன்றாக அரைத்து முடி உதிர்ந்த பகுதியில் பூசிவர முடி வளரும். 

முடியை உதிராமல் தடுக்க விரும்புபவர்கள் கீழாநெல்லி வேரை தேங்காய் எண்ணெயில் இட்டு காய்ச்சி அந்த எண்ணையை தினமும் தேய்த்து வரலாம். கருவேப்பிலையை தேங்காய் எண்ணெயில் இட்டு காய்ச்சி அந்த எண்ணையை தினமும் தேய்க்கலாம். 


செவ்வாய், 23 ஜூலை, 2019

பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டோரின் புகலிடம் விருப்பாக்ஷிபுரம், சித்தூர், ஆந்திர மாநிலம்.

நண்பரின் தந்தை உயர் ரத்த அழுத்தத்தின் காரணமாக மூளையில் ரத்தம் கட்டிய காரணத்தால், சென்னையில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தீவிர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டு அறுவை சிகிச்சை மூலம் சரிசெய்யப்பட்டது. ஆனால் அதன்பின்னர் அவரால் நடமாட முடியவில்லை.

உயர் ரத்த அழுத்தத்தின் காரணமாக பலரும் சந்திக்கும் பிரச்சினை பக்கவாதம். கை, கால்களை செயலற்றுப் போகச் செய்வதால் என்னதான் சிகிச்சை பெற்றாலும் எழுந்து நடமாடவே சில ஆண்டுகள் ஆகும்.

பக்கவாதத்தை சரிசெய்ய வேறு ஏதாவது வைத்திய முறை உள்ளதா என்று விசாரித்த போது, மற்றொரு நண்பர் சித்தூர் அருகில் இயற்கை வைத்திய முறையில் பக்கவாதத்தை சரிசெய்ய ஒரு வைத்தியசாலை இருப்பதாக சொன்ன தகவலை அடுத்து, இணையத்தில் தேடியபோது மராட்டி ரானோஜி ராவ் வைத்தியசாலை பற்றித் தெரிந்தது.

நானும், நண்பரின் தந்தை, தாயுடன் இரவு சுமார் 11 மணியளவில் சென்னையிலிருந்து காரில் கிளம்பினோம்சென்னையிலிருந்து,ஸ்ரீபெரும்புதூர், வாலஜாபேட்டை, ராணிப்பேட்டை வழியாக சித்தூர் சென்றோம். சென்னை பெங்களுரு நெடுஞ்சாலை வேலூர் மார்க்கமாக அமைப்பதற்கு முன் சித்தூர், பாலமனேர் வழியாக கோலார் செல்வதற்கான தேசிய நெடுஞ்சாலை இந்த சாலைதான்.

சித்தூர் அருகில் பிரபல காணிப்பாக்கம் விநாயகர் ஆலயம்  அமைந்துள்ளது. திருப்பதி தேவஸ்தானத்தின் நிர்வாகத்தின் கீழ் அமைந்துள்ள இந்த ஆலயம் மிகவும் பிரசித்தி பெற்றது.  

மேலும் ஆந்திராவின் ஊட்டி எனப்படும் மதனப்பள்ளி ஹாஸ்லி மலைத் தொடர், ஊட்டி போன்ற பருவநிலை கொண்ட இந்த மலைத்தொடருக்கு சுற்றுலா செல்ல விரும்புபவர்கள் சித்தூர், பலமனேர், புங்கனூரு வழியாக மதனப்பள்ளி சென்று அங்கிருந்து ஹாஸ்லி மலையை அடையலாம்

தற்போது சென்னை பெங்களுரு அதிவிரைவு சாலை (எக்ஸ்பிரஸ் வே) அமைக்கப்பட்டுக் கொண்டிருப்பதால் சிறிது கவனமாக செல்லவேண்டும். விரைவாக செல்ல விரும்புபவர்கள் வேலூர் மார்க்கமாக சென்று காட்பாடியிலிருந்து சித்தூரை அடையலாம்.

சித்தூர் நகரைக் கடந்தவுடன் வரும் நகர்ப்பகுதி பலமனேர். இங்கிருந்து நெடுஞ்சாலையிலிருந்து இடதுபுறம பிரியும் குப்பம் க்ராஸ் சாலையில் பிரயாணித்து, அதிலிருந்து பிரிந்து செல்லும் கிராமச்சாலையில் விருப்பாக்ஷிபுரத்தை அடையலாம்.

பல தலைமுறைகளாக மராட்டிய குடும்பம் ஒன்று வழிவழியாக இந்த வைத்தியத்தை சேவை மனப்பான்மையில் செய்து வருகின்றனர். லட்சக்கணக்கில் அலோபதி மருத்துவமுறையில் சரிசெய்ய முடியாத பக்கவாதம், நரம்பியல் மற்றும் இதர வாத நோய்கள் இங்கு வந்து இயற்கை மூலிகைகளால் தயாரிக்கப்பட்ட மருந்தை சாப்பிட்ட பின் சரியாவது அதிசயம்தான் அதுவும் வெறும் 500 ரூபாய் கட்டணத்தில் உயிர்காக்கும் மூலிகை மருத்துவத்தில்.

ஒரு நாளைக்கு சராசரியாக 1000 முதல் 1500 நோயாளிகள் வரை வந்து மருந்து சாப்பிட்டுச் செல்கின்றனர். அங்கு காத்திருந்த நேரத்தில் பல மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் தாங்கள் குணமடைந்ததை விவரிக்கும்போது நம்பிக்கை பிறக்கிறது.

இத்தனைக்கும் வரும் நோயாளிகள் யாரையும் பரிசோதிப்பதில்லை. நாடி பிடித்தோ அல்லது வேறு எந்த வகையிலுமோ எவ்வித பரிசோதனையும் செய்வதில்லை. பல நோயாளிகளை அவர்களது குடும்பத்தினர் மருத்துவமனையிலிருந்து நேரடியாக ஆம்புலன்ஸ் வாகனத்தில் அழைத்து வந்து மருந்து கொடுக்கின்றனர்.   

இயற்கை மூலிகைள் பொதுவாக நோயை குணப்படுத்த சிறிது கால தாமதமாகும் என்றே நாம் நம்பியிருந்த சூழலில் வெறும் 15 நாட்களிலேயே நடக்கவே முடியாத நிலையில் இருந்த நண்பரின் தந்தை ஒரளவு சுவரைத் தாங்கிப் பிடித்து நடக்க ஆரம்பித்தார். 15 நாட்கள் இடைவெளியில் மூன்று முறை சென்று நண்பரின் தந்தைக்கு மருந்து கொடுத்ததில் பூரண குணம் பெற்று சாதாரணமாக எல்லா இடங்களுக்கும் துணையின்றி சென்று வர ஆரம்பித்து விட்டார். அதற்கு ஆன செலவு 500 ரூபாய் வீதம் மூன்று முறைக்கும் சேர்த்து 1500 மற்றும் நாங்கள் சென்று வந்ததற்கான போக்குவரத்து செலவு. ஆக மொத்தம் சுமார் 20000 செலவில் பக்கவாதம் முற்றிலும் குணமாகிவிட்டது.

பக்கவாதம் பாதிக்கப்பட்டோர் மட்டுமல்ல, இதர வாதம், நரம்பு சம்பந்தப்பட்ட கோளாறுகளும் இந்த மருத்துவத்தில் சரிசெய்யப்படுகிறது. நோய் பாதிக்காத நல்ல நிலையில் உள்ளவர்களும் இந்த மருந்தினை உட்கொள்ளலாம். வரும் முன் காத்தல் நடவடிக்கையாகவும் மருந்தினை எடுத்துக் கொள்ளலாம்.

சுமார் இரண்டு மணி நேர இடைவெளியில் மூன்று முறை மருந்து உட்கொள்ள வேண்டும். காலை 5 மணிக்கு மருந்து கொடுக்கத் துவங்கி விடுகிறார்கள்முதல் மருந்து 8 மணிக்கு என்றால் இரண்டாவது மற்றும் மூன்றாவது மருந்து 10 மற்றும் 12 மணிக்கு எடுத்துக் கொண்டு உடனே கிளம்பிவிடலாம். பொதுப்போக்குவரத்து, பேருந்து வசதிகள் அதிகமில்லாத கிராமம். எனவே வாகனம் ஒன்றை தனியாக ஏற்பாடு செய்து சென்று வருவதே நல்லது. லட்சங்களில் மருத்துவமனைகளுக்கு செலவழிப்பதை  விட வாகனத்திற்கு சில ஆயிரங்கள் செலவு செய்வது ஒன்றும் பெரிதல்ல.

ஆனால் முக்கியமான விஷயம் என்னவென்றால் பத்தியம் இருக்க வேண்டும். 15 நாட்கள் வரை ஒரு பத்திய முறையும், இரண்டு மாதம் வரை பத்தியமுறையும் பரிந்துரைக்கிறார்கள். தமிழ், ஆங்கிலத்தில் அச்சடிக்கப்பட்ட பிரசுரங்கள் கொடுக்கப்படுகின்றன. அதில் குறிப்பிட்டபடி சில உணவுக் கட்டுப்பாடுகளை தவறாமல் கடைபிடித்தால் மிக விரைவில் குணமாகலாம்.

மிகச்சிறிய, அடிப்படை வசதிகளற்ற குக்கிராமம் ஆதலால் சித்தூர் அல்லது பலமனேர் ஆகிய ஊர்களில் குளிப்பது, புத்துணர்ச்சி பெறுவது மற்றும் காலை உணவை முடித்துக் கொள்ளவும். மருந்து சாப்பிட்டு விட்டு திரும்ப வரும்போதும் உணவு மற்றும் இதர தேவைகளுக்கு சித்தூர் அல்லது பலமனேர் வந்துதான் ஆகவேண்டும்தண்ணீர் வசதியோ, முறையான நல்ல உணவு விடுதிகளோ, குளியலறை,கழிப்பிட வசதியோ இல்லாத குக்கிராமம். எனவே தகுந்த முன்னேற்பாடுகளுடன் சென்று வரவும்.

நம் தேசத்தில் இதுபோன்ற பல இயற்கைமுறை வைத்தியங்கள் பற்றிய ரகசியங்கள் அடங்கிய ஓலைச்சுவடிகள் அந்நியர் படையெடுப்பில் கொள்ளை போனதால் பல மருத்துவ ரகசியங்கள் மறைந்து போய்விட்டன. நாம் மேற்கத்திய மருத்துவ முறைகளை நாடி சம்பாதித்த அனைத்தையும் இழக்கும் வகையில் மருத்துவம் பெரும் வணிகமாக மாறிவிட்டது.

ஆனால் மேற்கத்திய நாடுகளில் மக்கள் அனைவரும் மருத்துவக் காப்பீடு வைத்திருப்பதால் தப்பித்துக் கொள்கிறார்கள். நம் மக்களிடம் மருத்துவக் காப்பீடு பற்றிய விழிப்புணர்வே இன்னும் வரவில்லை என்பதுதான் வேதனையான விஷயம்மருத்துவச் செலவுக்காக சம்பாதித்த அனைத்தையும் இழக்க வேண்டியுள்ளது. எனவே தயவு செய்து அனைவரும் உங்கள் குடும்பத்திற்கு மருத்துவக்காப்பீடு எடுத்துக் கொள்ளுங்கள். வருடத்திற்கு சில ஆயிரங்கள் செலவைப் பார்த்தீர்களானால், பல லட்சங்களை இழக்க வேண்டிவரும்.  

எனது நேரடி அனுபவத்தில் குணமடைந்த பலரைக் கண்டதால், பக்கவாதம், நரம்பு, வாதம் போன்ற பிரச்சினைகளால் பாதிக்கப்பட்டவர்கள் இங்கு சென்று பலன் பெறுமாறு இக்கட்டுரை மூலம் உங்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துகிறேன்.

மருத்துவர். மோகன் ராவ், மராட்டி சி. ரானோஜி ராவ் பக்கவாத வைத்தியம், விருப்பாக்ஷிபுரம், பலமனேர், சித்தூர் மாவட்டம் 517 408.

கட்டுரையாளர்: . சங்கிலிக்காளை, தொடர்புக்குgsraj1979@gmail.com


கூகுள் வரைபடம் மூலம் வழி தெரிந்து கொள்ள :