Latest posts

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

ஞாயிறு, 8 நவம்பர், 2020

புதிய வருமான வரித் திட்டத்தைப் புரிந்துகொள்ளுங்கள்! - கட்டாயம் கவனிக்க வேண்டிய விஷயங்கள்!

 https://www.vikatan.com/news/general-news/understand-the-new-income-tax-plan-things-to-look-out-for0




வரி
வரி

எவையெல்லாம் நீங்கள் பெறக்கூடிய சலுகை எனப் புரிந்து கொண்டால் வரி முறையை நீங்கள் தீர்மானிக்கலாம்!

பிரீமியம் ஸ்டோரி
புதிய வருமான வரித் திட்டம் அறிவித்து, எட்டு மாதங்களுக்குமேல் ஆகிறது. ஆனால், இந்த நிதியாண்டுக்கான வருமான வரிக் கணக்கை புதிய வரித் திட்டத்தின் அடிப்படையில் செய்வதா, பழைய வரித் திட்டத்தின்படி செய்வதா என்ற குழப்பம் இன்னும் தீர்ந்தபாடில்லை. நடப்பு 2020-21–ம் நிதியாண்டுக்கான வருமான வரியை வரிக் கழிவுடன்கூடிய பழைய முறை, வரிக்கழிவு இல்லாத புதிய முறை என இரண்டு முறைகளில் ஏதாவது ஒன்றை ஒருவர் தேர்வு செய்து, அதன்படி வருமான வரியைக் கட்டலாம்.
புதிய வருமான வரித் திட்டத்தைப் புரிந்துகொள்ளுங்கள்! - கட்டாயம் கவனிக்க வேண்டிய விஷயங்கள்!

புதிய வருமான வரி முறை - சில குறிப்புகள்

  • வருமான வரிச் சட்டத்தில் புதிதாக 115BAC பிரிவு சேர்க்கப் பட்டிருக்கிறது. இதன்படி, நடப்பு 2020-21-ம் நிதியாண்டு முதல் அமலாக்கம் பெறுவதுதான் புதிய வருமான வரி முறை.

  • புதிய வரி முறையில் சேர விரும்புவோர் மட்டுமே சம்பளம் போடும் அதிகாரி அல்லது அலுவலக காசாளரிடம் ‘இசைவு’ தெரிவிக்க வேண்டும். இசைவு தெரிவிக்கவில்லை என்றால், அந்த வரிதாரர் பழைய வரி முறையிலேயே உள்ளதாகக் கருதப்படுவார்.

  • வணிக வருமானம் இல்லாதபட்சத்தில், சம்பளதாரர்கள் ஆண்டுக்கு ஆண்டு, வரி அளவைக் கணக்கிட்டு வரி முறையை மாற்றிக்கொள்ளலாம். அதாவது, பழைய முறையில் உள்ளவர், புதிய முறையைத் தேர்வு செய்யலாம். புதிய முறையில் உள்ளவர் பழைய முறைக்கு மாறிக்கொள்ளலாம்.

சம்பளதாரர்களுக்கு அடிப்படைச் சம்பளத்துடன் அகவிலைப்படி, நகர ஈட்டுப்படி, வீட்டு வாடகைப்படி, மருத்துவப்படி போன்றவை தரப்படுகின்றன. இதன்படி ஆண்டு வருமானம் 5 லட்சம் ரூபாய்க்குள் இருந்தால் பழைய மற்றும் புதிய முறையில் வரிச் செலுத்த வேண்டியதில்லை.

  • பழைய முறையில் வரிக்கு உட்பட்ட வருமானம் 5 லட்சம் முதல் 10 லட்சம் வரைக்கும் 20% வரிச் செலுத்த வேண்டும். ஆனால், புதிய முறையில் 5 லட்சம் முதல் 7.5 லட்சம் வரையில் வரிக்குரிய வருமானத்துக்கு 10% வருமான வரி கட்டினால் போதும்.

பழைய வரி Vs புதிய வரி

  • பழைய வரி முறையில் சுமார் 22 லட்சம் ரூபாய் அளவுக்கு வரிச் சலுகைகள் இருந்தாலும், அத்தனை சலுகைகளையும் ஒரே சம்பளதாரர் பயன்படுத்தி வரிச் சலுகை பெறுவது அரிது.

வீட்டுக் கடன், கல்விக் கடன் வாங்கியோர் பெருநகரங்களில் பணிபுரிந்து அதிகமாக வீட்டு வாடகை பெறுவோர்க்கு இப்போதைய நிலையில் பழைய முறை லாபகரமாக இருக்கக் கூடும்.

  • விரைவில் பணி ஓய்வு பெற உள்ளவர்கள் புதிய முறையைப் பரிசீலிக்கலாம். ஏனென்றால், பணிக்கொடைக்கான வரி விலக்கு, ஓய்வூதிய கம்யூடேசனுக்கான வரி விலக்கு, விடுப்பு சம்பளத்துக்கான வரி விலக்கு, பி.எஃப் முதிர்வுத் தொகைக்கான வரி விலக்கு, விருப்ப ஓய்வின் மீதான பணப்பலனுக்கு வரி விலக்கு, ஊழியர் டெபாசிட் திட்ட முதிர்வுத் தொகைக்கான வரி விலக்கு என அனைத்தும் புதிய வரி முறையைத் தேர்வு செய்பவர்களுக்கும் உண்டு. இவற்றுக்கு வரிச் செலுத்தத் தேவையில்லை.

புதிய வருமான வரித் திட்டத்தைப் புரிந்துகொள்ளுங்கள்! - கட்டாயம் கவனிக்க வேண்டிய விஷயங்கள்!

புதிய வரி முறையில் கிடைக்காத வரிச்சலுகைகள்!

புதிய வருமான வரி முறையில் கிடைக்காத வரிச்சலுகைகள் பல உண்டு. அவை, விடுப்பு பயணச் சலுகை (பிரிவு 10(5)), வீட்டு வாடகைப் படிக்கான வரிக்கழிவு (வருமான வரிப்பிரிவு 10(13A)).

பிரிவு 10(14) கீழ் அனுமதிக்கப்பட்ட உதவியாளர்படி, ஆய்வுப்படி, யூனிஃபார்ம்படி, சிறப்பு ஈட்டுப்படி, மலை உச்சி பணிப்படி, முதலானவை.

மைனர் வருமானத்துக்கான வரம்புக்கு உட்பட்ட வரிச்சலுகை (பிரிவு 10(32)), சிறப்புப் பொருளாதார மண்டலத் தொழில்முனைவோர் சலுகை (10 AA), ஸ்டாண்டர்டு டிடெக்சன் (பிரிவு 16 ia).

வீட்டுக் கடன் வட்டி (பிரிவு 24 b), கேளிக்கைப் படி(பிரிவு 16 ii), தொழில் வரி(பிரிவு 16 iii).

குடும்ப ஓய்வூதியம் பெறுவோர்க்கான வரிச்சலுகை ரூ.15,000 (பிரிவு 57(iia) ஆகிய வரிச்சலுகைகளும் கிடைக்காது.

பழைய வரி முறையில் சுமார் 22 லட்சம் ரூபாய் அளவுக்கு வரிச் சலுகைகள் இருந்தாலும், அத்தனை சலுகைகளையும் சம்பளதாரர் பயன்படுத்தி வரிச் சலுகை பெறுவது அரிது!

பி.எஃப். சந்தாவுக்கு வரிச்சலுகை இல்லை

அதுமட்டுமல்ல, 80சி பிரிவின் கீழ்வரும் செலவு மற்றும் சேமிப்புக்கான ரூ.1.5 லட்சம் அதாவது, ஆயுள் காப்பீடு பிரீமியம், அன்யூட்டி சந்தா, பி.எஃப் சந்தா, சுகன்யா சம்ருதி கணக்கு சந்தா, சேமிப்புப் பத்திரம் எது ஒன்றிலுமான (2C) சந்தா, ஊழியர் தனக்கோ, மனைவி குழந்தைகளுக்கோ ஆயுள் காப்பீடு பாலிசிக்கு கட்டும் பிரீமியம், வரிச் சலுகை உள்ள மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு போன்றவை, கல்விக் கட்டணம், வீட்டுக் கடன் அசல், ஐந்தாண்டு அஞ்சலக டெபாசிட் போன்ற இனங்களுக்கும் வரிச் சலுகை கிடைக்காது.

புதிய வருமான வரித் திட்டத்தைப் புரிந்துகொள்ளுங்கள்! - கட்டாயம் கவனிக்க வேண்டிய விஷயங்கள்!

மேலும், காப்பீட்டு நிறுவனம் ஒன்றில் அன்யூட்டி பெறுவதற்காகச் செலுத்தப்படும் சந்தா (பிரிவு 80CCC), என்.பி.எஸ் பென்ஷன் திட்டத்துக்கு ஊழியர் செலுத்தும் மாதச்சந்தா (பிரிவு 80CCD1)

அரசு ஊழியர்கள் செலுத்தும் சந்தாவுக்கு வரி இல்லை!

தமிழக அரசு ஊழியர்கள் பங்களிப்பு ஓய்வூதியத் திட்டமான சி.பி.எஸ்ஸுக்குச் செலுத்தும் சந்தா (பிரிவு 80CCD1), மருத்துவக் காப்பீடு பாலிசியில் தனக்கும், குடும்ப உறுப்பினர் மற்றும் பெற்றோருக்காகச் செலுத்தப்படும் பிரீமியம் (பிரிவு 80D), சம்பளதாரர் ஒருவர் மாற்றுத் திறனாளியைப் பராமரித்தால் அதற்காக அவரது வருமானத்தில் தரப்படும் கழிவு (பிரிவு 80DD), சம்பளதாரரே மாற்றுத் திறனாளியாக இருந்தால் அதற்காகத் தரப்படும் வருமானக் கழிவு (பிரிவு 80U), நரம்பியல், சிறுநீரகக் கோளாறு போன்ற தீவிரநோய் சீகிச்சைகளுக்காகச் செய்யப்படும் செலவுக்கான வருமானக்கழிவு (பிரிவு 80DDB), சம்பளதாரர் தன் மனைவி, குழந்தைகள் மற்றும் அவர் கார்டியனாக உள்ள ஒரு குழந்தைக்கு வாங்கிய கல்விக் கடனுக்குச் செலுத்தப்படும் வட்டி (பிரிவு 80E), பிரதமர் நிவாரண நிதி, முதல்வர் நிவாரண நிதி போன்றவற்றுக்கு சம்பளத்தாரர் தரும் நன்கொடை (பிரிவு 80G), அறிவியல் ஆராய்ச்சி மற்றும் ஊரக மேம்பாட்டு திட்டங்களுக்குத் தரப்படும் நன்கொடை (பிரிவு 80GGA).

அரசியல் நன்கொடைகளுக்கு வரிச் சலுகை இல்லை!

அரசியல் கட்சிகளுக்குத் தரப்படும் நன்கொடை (பிரிவு 80GGC), மின் வாகனக் கடனுக்குச் செலுத்தப்படும் வட்டி (பிரிவு 80EEB), 01.04.2019 முதல் 31.03.2021 வரை பெறப்படும் வீட்டுக் கடன்களுக்குச் செலுத்தப்படும் வட்டி (பிரிவு 80EEA), சம்பளத்துடன் வீட்டு வாடகை பெறாதவர் களுக்கு அவர்கள் கொடுக்கும் வீட்டு வாடகைக்கு சம்பளக்கழிவு (பிரிவு80GG).

வங்கி, அஞ்சலகம் மற்றும் கூட்டுறவு சங்க சேமிப்புக் கணக்கிலிருந்து பெறப்படும் 10,000 ரூபாய் வரைக்குமான வட்டி, வங்கி முதலானவற்றில் மூத்த குடிமக்கள் டெபாசிட்டுக்கான 50,000 ரூபாய் வரையான வட்டிக்கான சலுகை (பிரிவு 80TTB) ஆகியவற்றுக்கும் கிடைக்காது.

புரிந்துகொண்டால் லாபம்..!

இவற்றுள் எவையெல்லாம் நீங்கள் பெறக்கூடிய சலுகை என்பதைப் புரிந்து கொண்டால் பழைய முறையா, புதிய முறையா என்பதை நீங்கள் தீர்மானித்துவிடலாம். புதிய முறை என்றால் என்ன என்பதையே தெரிந்து கொள்ளாமல், வருமான வரியைக் குறைந்த அளவில் பிடித்தம் செய்ய உதவும்.

புதிய திட்டமோ, பழைய திட்டமோ அதைச் சரியாகப் புரிந்துகொள்ளாமல், புறக்கணிப்பது நமக்கு நஷ்டத்தைத்தான் ஏற்படுத்தும். பிற்பாடு, தெரியாத்தனமாக இவ்வளவு வரி கட்டி விட்டோமே என்று நினைத்து கவலைப்படுவதைவிட இப்போதே கொஞ்சம் சிரத்தை எடுத்து, அதைப்பற்றி நன்கு புரிந்துகொண்டு செயல்பட்டால், பல ஆயிரம் ரூபாயை நம்மால் மிச்சப்படுத்த முடியும்!