Latest posts

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

திங்கள், 18 அக்டோபர், 2021

உயிர் காக்க உதவுங்கள். உங்கள் பாதம் பணிந்து கேட்கிறேன்.

 

`மித்ராஎன்ற குழந்தையை உங்களுக்கு ஞாபமிருக்கிறதா? ஸ்பைனல் மஸ்குலர் ஆட்ரோஃபி (Spinal muscular autrophy) என்ற அரியவகை மரபணுக் கோளாறு நோயால் பாதிக்கப்பட்ட நாமக்கல் மாவட்டம், குமாரபாளையத்தைச் சேர்ந்த குழந்தை மித்ராவை நாம் அவ்வளவு சீக்கிரமாக மறந்திருக்க மாட்டோம். `Save Mithra' என்று கடந்த ஒருமாத காலமாக சமூக வலைதளங்களில் பலரும் மித்ராவுக்காகத் தொடர்ந்து குரல் கொடுத்துக்கொண்டே இருந்தனர். குழந்தை மித்ராவுக்கு ஏற்பட்ட அரியவகை மரபணுக் கோளாறு நோயை சரிசெய்ய `ஒருமுறை மரபணு மாற்று சிகிச்சைசெய்ய வேண்டும் எனவும், அந்த சிகிச்சைக்காக, வெளிநாட்டிலிருந்து வரவைக்க வேண்டிய மருந்தான `ஸோல்ஜென்ஸ்மா' (Zolgensma) விலை 16 கோடி ரூபாய் ஆகும் எனவும் மருத்துவர்கள் சொல்லியிருந்தனர்.

`இவ்வளவு பெரிய தொகையை எப்படித் திரட்டுவது?’ எனத் தெரியாமல் நிலைகுலைந்து போன குழந்தை மித்ராவின் பெற்றோர் `மித்ராவுக்கு உதவுங்கள்என சமூகவலைதளங்கள் மூலமாக நிதி திரட்ட ஆரம்பித்தனர். அந்த வகையில் `16 லட்சம் மக்கள் ஆளுக்கு 100 ரூபாய் கொடுத்தால்கூட மித்ராவைக் காப்பாற்றிவிட முடியும்என்ற வாசகத்துடன், மித்ராவுடைய புகைப்படம் பதித்த ஃபோட்டோ ஒன்றை மித்ராவின் பெற்றோர் சமூக வலைதளங்களில் பகிர, அது பெரும் வைரலானது. பலரும் சிறுமி மித்ராவுக்கு நிதியுதவி அளித்ததோடு, மற்றவர்களையும் உதவுமாறு அவர்களுடைய சமூக வலைதளங்கள் மூலமாக கோரிக்கை வைத்தனர்.

ன் 11-ம் தேதியிலிருந்து மித்ராவுக்கு நிதி திரட்டப்பட்டு வந்த நிலையில், நேற்று (ஜூலை 11) இரவு 10 மணியளவில் மருத்துவச் செலவுக்குத் தேவையான ரூ.16 கோடி நிதி கிடைத்துவிட்டது. இந்தச் செய்தி மித்ராவுக்காக உதவிய, பிரார்த்தனை செய்த அனைத்து உள்ளங்களுக்கும் பெரும் மகிழ்ச்சியைக் கொடுத்திருக்கிறது.

 

ஜெகதீஷ் மற்றும் எழிலரசியின் 1 வயது, 9 மாத மகள் பாரதி, முதுகெலும்பு தசைநார் குறைபாடு (SMA) வகை 2- உலகளாவிய அளவில் 10,000 குழந்தைகளில் 1 பேரை பாதிக்கும் ஒரு அரிய நோயால் கண்டறியப்பட்டுள்ளது. இந்த நோய் வேகமாக முன்னேறி, பெரும்பாலான சந்தர்ப்பங்களில் குழந்தையை 2 வயதுக்கு முன்பே கொன்றுவிடுகிறது.

துரதிர்ஷ்டவசமாக, இந்தியாவில் எஸ்எம்ஏவுக்கு எந்த சிகிச்சையும் இல்லை. பாரதிக்கு ஒரு முறை மரபணு மாற்று சிகிச்சை Zolgensma தேவை, அதை இறக்குமதி செய்ய வேண்டும். உலகின் விலை உயர்ந்த மருந்து என்று அழைக்கப்படும் இதன் விலை 16 கோடி ரூபாய் மற்றும் எந்த குடும்பமும் தனியாக வாங்க முடியாத விலை அதிகம்.

அவளுடைய பெற்றோர்கள் இவ்வளவு பெரிய தொகையை உங்கள் உதவியால் மட்டுமே சேர்க்க முடியும். அவளுக்கு உங்கள் அன்பும் ஆதரவும் தேவை, நீங்களும் அவளுக்கு உதவலாம். உங்களால் முடிந்ததை தானம் செய்யுங்கள்!

 

.இந்த குழந்தை மித்ரா மட்டுமல்ல தமிழ்நாட்டில் பல குழந்தைகள் இதுபோன்று தசைநார் சிதைவு நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். மித்ரா குணமாக அனைவரும் பத்து ரூபாய் கொடுங்கள் என்ற இயக்கம் ஆரம்பிக்கப்பட்டது. நான் ரூ. 200 நன்கொடையாக அளித்தேன். ஏன்னால் முடிந்தவரை 20 நபர்கள் 10 ரூபாய் கொடுப்பதற்குப் பதிலாக நாமே 20 நபர்களின் பங்கான ரூ. 200 ஐ அளிக்கலாம் என்ற ஒரு எண்ணம். எனது வருமானம் இந்த ஆட்கொல்லி கொரோணா கிருமியால் குறைந்தாலும் ஒரு உயிரைக் காப்பதற்கு நம்மால் முடிந்த ஒரு உதவுpயைச் செய்ய வேண்டும் என்ற எண்ணத்துடன் மித்ரா வின் மருத்துவ சிகிச்சைக்கு ரூ. 10 வேண்டிய சென்னையில் அமைந்துள்ள அறக்கட்டளைக்கு ரூ. 200 அனுப்பினேன்.

தற்போது அதே நிலையில் ஜகதீஸ் எழிலரசி தம்பதியரின் 1 வருட 9 மாதக் குழந்தையும் முதுகுத் தண்டுவட தசைநர் சிதைவு நோயால் பாதிக்கப்பட்டு ரூ. 16 கோடீ மதிப்புள்ள மருந்து செலுத்தப்பட்ட்hவல் மட்டுமே குணமடைய முடியும் என்ற நிலையில் உங்கள் அனைவரின் உதவியை நாடி உள்ளனர். என்னால் முடிந்த ரூ. 333 தொகையை நான் குழந்தையின் தந்தையின் வங்கிக் கணக்கிற்கு அனுப்பியுள்ளேன். உங்களால் முடிந்த எந்த ஒரு தொகையையும் அனுப்பி அக்குழந்தையின் உயிர் காத்து உதவுமாறு உங்கள் பாதம் பணிந்து வேண்டுகிறேன்.

அவரது கூகுள் பே எண். 97917 93435

 

கட்டுரையாளர்: க. சங்கிலிக்காளை தொடர்புக்கு : 9600106471



https://youtu.be/zqjmwO0XaWo

சாலியர் குரல் - அக்டோபர் 2021 - மாத இதழ்