Latest posts

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

திங்கள், 26 டிசம்பர், 2016

தேசிய ஓய்வூதியத் திட்டம் - ஓர் பார்வை

அனைத்து மக்களுக்கும் முதுமைக் காலத்தில் பயன்படும் வகையில் புதிய ஓய்வூதியத் திட்டம் மத்திய அரசால் அறிமுகப்படுத்தப் பட்டது. அது முதல் அரசு ஊழியர்கள், தனியார் ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் அனைவரும் இத்திட்டத்தில் சேர்ந்து ஓய்வூதியப் பலன்கள் பெற வழி செய்யப்பட்டது. 


என்.எஸ்.டி.எல். (NSDLஎனும் பொது நிறுவனம் இந்தத் திட்டத்தின் கணக்குகளை பராமரித்து செயல்படுத்தும் நிறுவனமாக அங்கீகரிக்கப் பட்டது. 

18 முதல் 60 வரையிலான வயதுள்ளவர்கள் இத்திட்டத்தில் இணைந்து சேமிக்கலாம். 

பென்சன் பண்டு ரெகுலேட்டரி அன்டு டெவலப்மென்ட் அத்தாரிட்டி எனும் நிறுவனம் இந்தத் திட்டத்தின் ஆய்வு மற்றும் குறைதீர்க்கும் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளது. 

ராணுவத்தினர் மட்டும் இத்திட்டத்தில் சேர்வதிலிருந்து விலக்களிக்கப் பட்டுள்ளனர். 

இத்திட்டத்தில் சேர்பவர்கள் நிரந்தர ஓய்வூதியக் கணக்கு எண் எனப்படும் பெர்மனென்ட் ரிட்டையர்மன்ட் அக்கவுண்ட் நம்பர் (பிரான் - PRAN) எனும் எண் பெற வேண்டும். வருமான வரித்துறையின் பெர்மனென்ட் அக்கவுண்ட் நம்பர் (பான்) போல ஒருவர் ஒரு எண் மற்றும் பெற முடியும். பான் கார்டு மாதிரியே அடையாள அட்டை அளிக்கப்படும். அந்த அட்டையின் மூலம் நமது புதிய ஓய்வூதியக் கணக்கை நிர்வகிக்கலாம். 

புதிய ஓய்வூதியத் திட்டத்தில் அடுக்கு 1 மற்றும் அடுக்கு 2 (Tier – I and Tier II) என இருவகையான கணக்குகள் உள்ளன. 

அடுக்கு 1 – ஓய்வூதியத்திற்கான சேமிப்பு மற்றும் முதிர்வடைந்த பின்னரே பலன் கிடைக்கும். இக்கணக்கில் சேமிக்கப்படும் தொகைக்கு வருமான வரிச்சலுகை பெறலாம். 

அடுக்கு 2 – சேமிப்புக் கணக்கு மற்றும் தேவைப்படும்போது பணத்தை பெற்றுக் கொள்ளலாம். இதில் சேமிக்கப்படும் தொகைக்கு வரிச்சலுகை எதுவும் கிடையாது. 

இந்தக் கணக்குகளை இணைய வழியிலும் துவக்கலாம்.

மேலும் தகவலுக்கு

http://www.pfrda.org.in/

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக